மார்ச் மாதத்தில் சீனச் சேவைத் துறையின் சீரான வளர்ச்சிப் போக்கு
2024-04-06 16:50:54

இவ்வாண்டின் மார்ச் மாதத்தில், சீனச் சேவைத் துறையின் வணிக அலுவல் குறியீடு 52.4 விழுக்காடாகும். இது பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 1.4 விழுக்காடு அதிகம். இக்குறியீடு மூன்று மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து, சேவைத் துறையின் விரிவாக்க போக்கு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது என்று சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகத்தின் சேவை துறை ஆய்வு மையமும் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனமும் அண்மையில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், அஞ்சல் சேவை, தகவல் தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, செயற்கை கோள் அனுப்புதல் சேவை, பணம் மற்றும் நாணய சேவை முதலிய துறைகளின் வணிக அலுவல் குறியீடு, 60 விழுக்காட்டுக்கு மேலான செழிப்பு இடைவெளியில் இருந்து, அலுவல் அளவு விரைவாக அதிகரித்தது. மொத்த விற்பனை, இருப்புப்பாதை போக்குவரத்து, வாடகைக்கு வாங்கல் மற்றும் வணிக சேவை முதலிய துறைகளின் வணிக அலுவல் குறியீடு 53 விழுக்காடு மற்றும் இதற்கு மேலான இடைவெளியில் இருந்து, செழிப்பு நிலை வேறுபட்ட அளவில் மீட்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.