பாலஸ்தீன-இஸ்ரேலின் புதிய சுற்று மோதலினால் இஸ்ரேல் பொருளாதாரம் பாதிப்பு
2024-04-07 09:50:53

அரை ஆண்டு நீடித்த பாலஸ்தீன-இஸ்ரேலின் புதிய சுற்று மோதலினாஸ், காசா பகுதி கடுமையான மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியது. இதைத் தவிர்த்து, இஸ்ரேலின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, அயர்லாந்து மூலோபாய முதலீட்டு நிதி இஸ்ரேலின் பல நிறுவனங்களிலிருந்து நிதியை விலக்கவுள்ளது என்று அயர்லாந்து நிதி அமைச்சகம் ஏப்ரல் 5ஆம் நாள் அறிவித்தது.

பல காரணங்களால், நார்வே அரசு உலகளாவிய நிதி கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேலின் ஒன்பது நிறுவனங்களிலிருந்து நிதியை விலகியுள்ளன என்று இஸ்ரேலின் டைம்ஸ் நாளேடு மார்ச் 26ஆம் நாள் அறிவித்தது.

இஸ்ரேல் மத்திய புள்ளிவிவர பணியகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், இஸ்ரேல் பொருளாதாரம் 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.7 விழுக்காடு குறைந்து, தனிப்பட்ட நுகர்வு  2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 27.3 விழுக்காடு குறைந்துள்ளது. தொடர்ச்சியான மோதல், இஸ்ரேலின் நிதிக்கு அதிக அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.