இலங்கை 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனையும், வட்டித் தொகையையும் திரும்பச்செலுத்தியது
2024-04-07 17:07:18

இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றது முதல் இவ்வாண்டின் பிப்ரவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 190 கோடி அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டிக் தொகையை இலங்கை அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளதாக அரசுத்தலைவரின் சமூக விவகாரங்களுக்கான பொது இயக்குனர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளி வளங்கள் துறையின்படி, ஆசிய வளர்ச்சி  வங்கிக்கு 76.01 கோடி டாலர்களும், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 70 லட்சம் டாலர்களும் செலுத்தப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில், 57.1 கோடி டாலர் மதிப்பிலான இருதரப்பு கடன்கள் மற்றும் வட்டியும் செலுத்தப்பட்டுள்ளதாக தென்னகோன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அதிக வட்டி விகிதத்தில் பெறப்பட்ட 440 கோடி   டாலர்களுக்கும் அதிகமான வணிகக் கடன்கள் மற்றும் வட்டியை மறுசீரமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தென்னகோன் மேலும் கூறினார்.