சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
2024-04-07 18:15:23

சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 24 ஆயிரத்து 570 கோடி அமெரிக்க டாலரை எட்டி, பிப்ரவரி இறுதியில் இருந்ததை விட 1980 கோடி அமெரிக்க டாலரை அதிகரித்து, 0.62 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில், முக்கிய நாடுகளின் நாணயக் கொள்கை, மதிப்பீடு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தரவுகள் உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு உயர்ந்தது. சீனப் பொருளாதாரத்தின் மீட்சிப் போக்கு வலுவடைந்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பின் நிலைத் தன்மைக்கு இது ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.