சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி சேவை வளர்ச்சி
2024-04-07 15:10:54

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி 1594 கொள்கலன்களை அனுப்பியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 82 விழுக்காடு அதிகமாகும். வளர்ச்சி வேகம் வலுவாக இருந்தது. இது சீனாவிற்கும் வியட்நாமுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்களுக்கு வலுவான போக்குவரத்து உத்தரவாதத்தை அளித்தது என்று சீனா இருப்புப் பாதை குழுமத்தைச் சேர்ந்த நானிங் பணியகக் குழு நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.

இவ்வாண்டு முதல், சீன-வியட்நாம் பொருளாதார மற்றும் வணிகத் தொடர்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான எல்லை தாண்டிய சரக்கு போக்குவரத்து உயர் மட்டத்தில் இருந்தது. மார்ச் திங்களில், சீன-வியட்நாம் விரைவு சுங்க அனுமதி வகுப்பு 900 கொள்கலன்களைத் தாண்டி பொருட்களை அனுப்பியது. இது ஒரு மாதத்திற்கு மிக உயர்ந்த சாதனையை உருவாக்கியது.