சுரிநாம் அரசுத் தலைவரின் சீனப் பயணம் பற்றிய சீனாவின் கருத்து
2024-04-08 17:19:14

சுரிநாம் அரசுத் தலைவர் சந்தோகியின் சீனப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஏப்ரல் 8ஆம் நாள் கூறுகையில், சீன-சுரிநாம் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு உருவாக்கப்பட்ட 5ஆவது ஆண்டு நிறைவாக இவ்வாண்டு திகழ்கிறது. இந்நிலையில் அரசுத் தலைவர் சந்தோகி சீனாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறோம். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அரசுத் தலைவர் சந்தோகியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றார்.

மேலும், சீன-சுரிநாம் தூதாண்மை உறவு உருவாக்கியது முதல் இதுவரை, இரு நாட்டுறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு துறைகளில் செழிப்பான சாதனைகளைப் பெற்றுள்ளன. சுரிநாமுடன் இணைந்து ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.