இலங்கை 1,340.87 சதுர கிமீ பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணியை நிறைவு செய்துள்ளது
2024-04-08 17:22:38

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,340.87 சதுர கிமீ பரப்பளவில், கண்ணிவெடி அகற்றும் பணி நிறைவடைந்துள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் சுமார் 25 லட்சம் கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாகாணங்களில் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணி இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் இவ்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, 2028 ஆம் ஆண்டளவி ல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. நாட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இராணுவமும், நான்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நடவடிக்கைகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 75 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.