சீன, ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-04-09 19:43:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஏப்ரல் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங் யீ கூறுகையில், சீன-ரஷிய உறவை சீராக வளர்ப்பது, அண்டை நாடுகளான சீனா மற்றும் ரஷியாவின் இன்றியமையாத தெரிவாக விளங்கி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது என்று தெரிவித்தார். ரஷியாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய பொது கருத்துக்களின்படி இரு நாட்டு உயர் நிலை பரிமாற்ற அமைப்பு முறையின் மேம்பாட்டை சீராக வெளிக்கொணர்ந்து, பல்வேறு துறைகளிலான எதார்த்தமான ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

லாவ்ரோவ் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ரஷியா ஊன்றி நிற்கின்றது. சீனாவுடன் இணைந்து, உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பொருளாதாரம் வர்த்தகம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்க ரஷியா விரும்புவதாக தெரிவித்தார்.