ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக மாறும் பாலஸ்தீனத்தின் விண்ணப்பம்:ஐ.நா. பாதுகாப்பவை விவாதம்
2024-04-09 15:16:27

ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக இணைவதற்கான பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை ஐ.நா.பாதுகாப்பவையின் புதிய உறுப்பு நாடு சேர்க்கைக்கான குழுவிடம் ஐ.நா.பாதுகாப்பவை ஏப்ரல் 8ஆம் நாள் சமர்ப்பித்தது. ஏற்பாட்டின் படி, அன்று இக்குழு தனது முதல் கலந்தாய்வு நடத்தியது.

பாலஸ்தீனம், தற்போது ஐ.நா.வின் பார்வையாளராக இணைந்துள்ளது. ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக சேர்ப்பதற்கு ஐ.நா.பாதுகாப்பவை மற்றும் ஐ.நா. பொது பேரவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

முன்பு, பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள 2011ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். முதலில் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற கூறிய அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பவையில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியது. எனவே பாலஸ்தீனம் விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்தியது.