அமெரிக்காவின் “தைவானுடன் உறவுச் சட்டம்” சட்டவிரோதமானது: சீனா
2024-04-10 15:31:28

சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகம் 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஒரே சீனா எனும் கொள்கை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் தூதாண்மையுறவு நிறுவப்பட்டு, வெளியுறவை வளரப்பதற்கு அரசியல் அடிப்படையாகவும் அடிப்படை முன்நிபந்தனையாகவும் விளங்குகிறது என்று இப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சூஃபான்லியென் அம்மையார் தெரிவித்தார்.

அமெரிக்காவால் கூறப்படும் தைவானுடன் உறவுச் சட்டம் மற்றும் 6 வாக்குறுதிகள், ஒரே சீனா கொள்கை மற்றும் 3 சீன-அமெரிக்க  கூட்டறிக்கைகளைக் கடுமையாக மீறியுள்ளன. சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாட்டை மீறியதுடன், சீனாவின் உள் விவகாரத்தில் இது மோசமாகத் தலையிட்டுள்ளது. தொடக்கத்திலேயே, இச்சட்டத்திற்கு சீன அரசு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே சீனா கொள்கை மற்றும் 3 சீன-அமெரிக்க  கூட்டறிக்கைகளின் விதிகளை அமெரிக்கா நடைமுறையாகப் பின்பற்ற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. தைவான் சுதந்திர சக்திக்குத் தவறான சமிக்கையை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.