தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை முன்னேற்றி வருகின்ற சீன அரசு
2024-04-10 17:30:41

அண்மையில், சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டபோது, மா யிங்ஜியூ கூறுகையில், எதிர்காலத்தில், தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்துக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்புள்ளது என்றார். இது குறித்து, சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் ஏப்ரல் 10ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஜூ ஃபெங்லியான் கூறுகையில், பொது மக்கள், தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அடிப்படையாகவும் இயக்காற்றலாகவும் திகழ்கின்றனர். இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை ஆக்கமுடன் முன்னேற்றி வருகிறோம். பெருநிலப்பகுதியில் தைவான் இளைஞர்களின் படிப்பு, வேலை வாய்ப்பு, வாழ்க்கை முதலியவற்றுக்கு மேலதிக வசதிகளை வழங்குவோம் என்றார்.

மேலும், இரு கரைகளின் பல்வேறு துறையினருடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, தடைகளைச் சமாளித்து, இரு கரை இளைஞர்களின் பரிமாற்றைத்தை முன்னேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இரு கரை உறவின் வளர்ச்சிக்கு உயிராற்றலை ஊட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.