உதவி பொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்வதை இஸ்ரேல் தடை:ஐ.நா.
2024-04-10 10:19:43

ஐ.நா. வழங்கிய உதவி பொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்வதை இஸ்ரேல் இன்னும் தடுக்கிறது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஸ் லெர்கே ஏப்ரல் 9ஆம் நாள் தெரிவித்தார்.

மார்ச் திங்களில், காசாவின் வட பகுதிக்கு ஏற்றிச்செல்லப்பட்ட பாதியளவான உதவிப் பொருட்களை இஸ்ரேல் நிராகரித்தது. இறுதியில் காசா பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் உள்ளூர் தேவைகளுக்குப் போதியதாக இல்லை. மனிதாபிமான பொருட்களை வழங்குவதற்கு இஸ்ரேல் தடையாக இருப்பதாக பிற உதவி அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன. காசா பகுதிக்குள் போதுமான உணவு, மருந்துகள் முதலிய பிற பொருட்களுக்கு உறுதியாக உத்தரவாதம் இல்லை என்று லெர்கே தெரிவித்தார்.