யுன்னான் வாழ்க்கை முறையை எங்களுடன் இணைந்து அனுபவியுங்கள்
2024-04-10 14:20:42

யுன்னான் மாநிலமானது, பல்லுயிர் பெருக்கத்துக்கு உரிய இடம், அங்கு விலங்கினங்களும் தாவரங்களும் இணக்கமாக வாழ்கின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் பிரம்மிக்க வைக்கும் தளங்களும், இயற்கைக் கொடை யுன்னான் மாநிலத்தின் தனித்துவம். அதேசமயம், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பெருமைக்கும் ஆதாரமாக யுன்னான் திகழ்கிறது.

“திறந்த மற்றும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையும், விருந்தோம்பலுக்கான மரபணுவும் யுன்னான் மக்களின் குருதியில் கலந்துள்ளது. இது, மகிழ்ச்சி மற்றும் அழகை நாடுவதன் உந்துதலால் ஏற்படுகிறது,” என்று யுன்னான் மாநில சிபிசி கமிட்டி செயலாளர் வாங் நிங் தெரிவிக்கின்றார்.

சீனாவின் பிற பகுதிகள் மற்றும் உலகில் உள்ள நண்பர்கள் யுன்னானில் பயணிக்க வரவேற்கின்றேன். யுன்னான் வாழ்க்கை முறையை எங்களுடன் இணைந்து அனுபவியுங்கள். யுன்னானில் வாழும் அழகு என்பது அதன் இயற்கைச் சூழலிலும், மக்களிடையேயும் கண்டறிய முடியும். அத்துடன், மக்களின் வாழ்வாதாரத்திலும்கூட காண முடியும்.

யுன்னான் வாழ்க்கை முறை என்ற இந்த யோசனை தெரிவிக்கப்பட்ட பிறகு, அது சமூக ஊடகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மில்லியன் கணக்கானோர் தங்களின் விருப்பங்களைத் தெரிவித்தனர். யுன்னான் வாழ்க்கை முறையை மிகவும் தனித்துவப்படுத்துவது எது?

தெளிந்த நீர், பசுமையான மலைகள், நீலநிற வானம், வெண்ணிற மேகங்கள் மற்றும் புதிய காற்று ஆகியவை யுன்னானில் பரவியுள்ளன. டியன் ஏரியில் இடம்பெயரும் கருநிற கழுத்து கொண்ட கடற் பறவையை நெருங்கிப் பார்க்க முடியும். உள்ளூர் மலர்களை ரசிக்க முடியும், உள்ளூர் தேநீரை பருக முடியும், உள்ளூர் காஃபியை ருசிக்க முடியும், உள்ளூர் பழங்களை சுவைக்க முடியும் மற்றும் உள்ளூர் காளான்களை உட்கொள்ள முடியும். இவையெல்லாம், இயற்கையின் அழகிய கொடைகள். சிசுவங்பன்னா வெப்பமண்டல மழைக்காடுகள், சங்ஷான் மலை மற்றும் அர்ஹய் ஏரியின் அற்புதமான காட்சிகள், மழைக்குப் பிந்தைய வெயில் போன்று தோற்றமளிக்கும் லூகு ஏரியின் அமைதியான அழகு இவையெல்லாம் தான், யுன்னான் மாநிலத்தின் தனித்துவங்கள்.

பண்டைய தேயிலை-குதிரை பாதையில் ஒரு பழமொழி உண்டு: “சிறந்த தேநீரை நண்பர்களுடன் இணைந்து பருக வேண்டும்.”  இத்தகைய திறந்த மற்றும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையும், விருந்தோம்பலுக்கான மரபணுவும் யுன்னான் மக்களின் குருதியில் கலந்துள்ளது.