தற்போதைய சீன-இந்திய உறவு பற்றிய சீனாவின் கருத்து
2024-04-11 17:04:05

தற்போதைய சீன-இந்திய உறவு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஏப்ரல் 11ஆம் நாள் கூறுகையில், சீரான மற்றும் நிதானமான சீன-இந்திய உறவு, இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியதோடு, இப்பிரதேசம் மற்றும் உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் துணைப் புரியும். எல்லை பிரச்சினையை, சீன-இந்திய உறவின் உரிய இடத்தில் வைத்து, உகந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், தற்போது சீனாவும் இந்தியாவும் தூதாண்மை மற்றும் இராணுவ வழிமுறைகளின் மூலம் எல்லை பிரச்சினைக்கான தீர்வு குறித்து நெருக்கமாக தொடர்பு கொண்டு, ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன. இந்தியா, சீனாவுடன் இணைந்து நெடுநோக்கு மற்றும் தொலைநோக்கு கோணத்திலிருந்து இரு தரப்புறவைக் கையாண்டு, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நின்று, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் சமாளித்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.