இலங்கை பொருளாதார வளர்ச்சி 1.9 விழுக்காடு
2024-04-12 17:12:49

இலங்கையின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 1.9 விழுக்காடாகவும் அடுத்த ஆண்டு 2.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சி சுருங்கி வந்த நிலையில் இப்புதிய மதிப்பீட்டை இவ்வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆசிய வளர்ச்சி கண்ணோட்டம் ஏப்ரல் 2024 அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் பொருளாதார வளர்ச்சி சுருங்கிய நிலையில் இரண்டாவது பாதியில் 3 விழுக்காடு வளர்ச்சி கண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

 அதேபோல், பணவீக்கமானது இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் 10 விழுக்காட்டுக்கும் கீழ் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டில் உள்நாட்டு நுகர்வுத் தேவை குறைந்தது பொருளாதார வளர்ச்சியை பாதித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.