17ஆம் நாள் போயிங் விமானத்தின் பாதுகாப்பு அறிக்கை பற்றிய கருத்து கேட்பு கூட்டம்
2024-04-12 16:30:47

போயிங் விமானத்தின் பாதுகாப்பு அறிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் வணிகக் குழு நிபுணர்கள் குழுவுடன் 17ஆம் நாள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவுள்ளதாக 11ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிபுணர்க்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு போயிங் நிறுவனத்தின் பாதுகாப்புப் பண்பாட்டை விமர்சித்ததோடு,  பாதுகாப்பு சார்ந்து பெரிய முன்னேற்றததைக் கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவித்து இருந்தது. இவ்வறிக்கையிலுள்ள புலனாய்வு முடிவுகள் மற்றும் முன்மொழிவுகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். முன்னதாக, போயிங் நிறுவனத்தின் பல ரக விமானங்களில் கடும் குறைபாடுகள் காணப்படுவதோடு விமானப் பயணத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக போயிங் நிறுவனத்தின் பொறியியலாளர் சாம் சலிஹ்பூர் குற்றஞ்சாட்டியிருந்தார்.