சபோரிசிய அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்குச் சீனா ஆதரவு
2024-04-12 09:43:16

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 11ஆம் நாள் செயல் குழுவுக்கான சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், சபோரிசிய அணு மின் நிலையத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் இந்நிறுவனத்திற்கான சீனப் பிரதிநிதி லிசொங் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சீனாவின் நிலைப்பாடு குறித்து விளக்கிக்கூறினார்.

 

அணு வசதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற சீனா ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்புடைய தருப்புகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, அணு வசதிகளுக்கு அபாயம் கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், அமைதி பேச்சுவார்த்தை என்ற சரியான வழிக்குச் சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு,  இந்த அணு மின் நிலையத்தின் பாதுகாப்புரீதியிலான அபாயத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.