ஜெர்மன் தலைமையமைச்சரின் சீனப் பயணம் குறித்து சீனாவின் கருத்து
2024-04-12 19:12:51

ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரது சீனப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஏப்ரல் 12ஆம் நாள் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவருடன் சந்திப்பு நடத்தவுள்ளார். தலைமையமைச்சர் லீ ச்சியாங் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பு உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார் என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு சீனாவும் ஜெர்மனியும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்கியதன் 10ஆவது ஆண்டு நிறைவாகும். ஜெர்மன் தரப்புடன் இணைந்து, தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸின் பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரித்து, எதார்த்தமான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, உலகின் அமைதி மற்றும் செழுமைக்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புவதாக மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.