வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பிரச்சினை பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் விவாதம்
2024-04-12 10:56:00

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஏப்ரல் 11ஆம் நாள் போலந்தில் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் தலைநகர் வார்சாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்னாட்டுத் தலைவர்களுடன் இணைந்து கூட்டத்தை நடத்தி 2024முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் நெடுநோக்கு நிகழ்ச்சி நிரலை விவாதித்தார். தேசியப் பாதுகாப்பு ஆற்றலை வளர்ப்பது, பொருளாதாரம் மற்றும் மூலதன சந்தையை வளர்ப்பது, முதலீட்டை விரிவாக்குவது உள்ளிட்ட 3 முன்னுரிமை கொண்ட விவகாரங்கள் இக்கூட்டத்தில் பெரும் கவனம் செலுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் எஸ்டோனியா, கிரேக்கம், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.