ஐ.நா.வில் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடாக பாலஸ்தீனம் இணைவது குறித்து ஒத்தக் கருத்து எட்டப்படவில்லை
2024-04-12 09:56:26

ஐ.நா.பாதுகாப்பவை நடத்திய சிறப்புக் கூட்டத்தில் ஐ.நா.வில் அதிகார ப்பூர்வ உறுப்பு நாடாக பாலஸ்தீனம் இணைவது குறித்து ஒத்த கருத்து எட்டப்படவில்லை என்று ஐ.நா.பாதுகாப்பவையின் நடப்புத் தலைமை பதவி வகிக்கும் நாடான மால்டாவின் ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி வனேசா ஃப்ரேசர் ஏப்ரல் 11ஆம் நாள் தெரிவித்தார்.

ஒத்த கருத்து எட்டப்படவில்லை என்ற போதிலும், "ஐ.நா.வின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடாக பாலஸ்தீனத்தை சேர்க்க பெரும்பாலான உறுப்பு நாடுகள் தெளிவாக ஆதரவளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.