வட்டி விகிதம் குறைப்பு: ஐரோப்பிய மத்திய வங்கியின் அறிகுறி
2024-04-12 16:14:57

ஐரோப்பிய மத்திய வங்கி 11ஆம் நாள் நாணயக் கொள்கை கூட்டம் ஒன்றை நடத்தி, 3 முக்கிய வட்டிகளை நிலைநிறுத்தி, நாணயக் கொள்கையை தளர்த்தும் அறிகுறி வெளிபடுத்தியுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு முன்பே ஜூன் திங்களில் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது. ஆனால், எதிர்காலத்தில் யூரோ பகுதியில் வட்டி குறைப்புக்கான வரம்பு குறைவாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் திங்களில் நடைபெறும் அடுத்த நாணயக் கொள்கை கூட்டத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை குறைக்கும் எனும் தகவலை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் பொதுவாகக் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கு முன்பு, வட்டியை குறைத்தால், யூரோ நாணய மதிப்பிறக்கத்தால் ஏற்படவிருக்கும் பண வீக்கத்தை ஐரோப்பிய மத்திய வங்கி எதிர்நோக்கும் என்று சில நிபுணர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.