திபெத்தில் பிரசவித்த பெண்கள் மற்றும் கைகுழந்தைகளின் உயிரிழப்பு வரலாற்றில் மிக குறைந்த அளவில் உள்ளது
2024-04-13 19:51:20

2023ஆம் ஆண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பேறு கால பெண்களின் உயிரிழப்பு விகிதம் இலட்சத்துக்கு 38.63 ஆகவும், கைக்குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் ஆயிரத்துக்கு 5.37 ஆகவும் இருந்தன. இரண்டு தரவுகளும் வரலாற்றில் மிகவும் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

12ஆம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசாங்கத்தின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ மனையில் குழந்தை பிறப்பின்போது முழு கட்டணச் சலுகை, தாய்மார்களுக்கு மானியத் தொகை உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் திபெத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் விதம் அவசர மருத்துவப் பரிசோதனை, குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு எஷ்.பி.வி.HPVதடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.