சரக்கு வர்த்தகத்தில் சீனா தொடரந்து முதலிடம் பெற்றது
2024-04-13 19:49:03

2023ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி, உலக சந்தையில் 14.2 விழுக்காடு வகித்தது. சரக்கு வர்த்தகத்தில் சீனா, 7 ஆண்டுகளாக தொடர்ந்து மிக பெரிய நாடு என்ற தகுநிலையைப் பெற்றுள்ளதாக சீன வணிகத்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒருவர் 12ஆம் நாள் தெரிவித்தார்.

உற்பத்தி-வினியோக சங்கிலி இணைப்பு மேம்பாடு, தொடர்ச்சியான புத்தாக்க திறன் ஆகியவற்றின் மூலம், சீனாவின் பல்வகை தரமான உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் வரவேற்கப்படுவதை, ஏற்றுமதி இறக்குமதி சந்தையில் சீனா வகித்து வரும் நிதானமான விகிதம் காட்டியுள்ளது. மிக பெரிய அளவான சந்தை மேம்பாட்டைப் பயன்படுத்தி, சீனாவின் இறக்குமதி பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான உந்து விசையை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.