இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி நடவடிக்கை
2024-04-14 18:45:49

இஸ்ரேல் மீது ஈரான் 13ஆம் நாள் இரவு மேற்கொண்ட பதிலடி நடவடிக்கை, சர்வதேச சமூகத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் இராணுவத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 14ஆம் நாள் கூறுகையில், 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இவ்வற்றில், 99விழுக்காட்டுக்கும் அதிகமானவை இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குச் சொந்தமான பிரதேசத்தில் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றிற்கு சிறிதளவிலான சேத்த்தை ஏற்படுத்தின என்று தெரிவித்தார்.

தற்போது, இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல், ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளின் மூடப்பட்ட வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இராணுவ நடவடிக்கை, சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாகும் என்று ஐ.நாவுக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதிக் குழு 13ஆம் நாள் சமூக ஊடகம் வழியாக தெரிவித்தது.

இது குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்த ஐ.நா.தலைமைச் செயலாளர் குட்ரெஸ், பல்வேறு தரப்புகள் இயன்றளவில் கட்டுபாட்டுடன் செயல்படுமாறு  13ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஐ.நா.பாதுகாப்பவை 14ஆம் நாள் அவசரக் கூட்டத்தை நடத்த நிர்ணயித்துள்ளது.