4டி காவ்ஜிங் 3-01 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
2024-04-15 15:02:37

ஏப்ரல் 15ஆம் நாள் 12:12 மணிக்கு ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில், சீனா லாங் மார்ச்-2D ஏவூர்தியைப் பயன்படுத்தி, 4டி காவ்ஜிங் 3-01 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இச்செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்ததுடன், இந்த ஏவுதல் பணி வெற்றி பெற்றது. எண்ணியல் வேளாண்மை, நகர்ப்புற தகவல் மாதிரி, உண்மையான 3டி காட்சி முதலிய வளர்ந்து வரும் சந்தைகளுக்கும், தேசிய நில அளவு கணக்கெடுப்பு, பேரழிவு தடுப்பு மற்றும் குறைப்பு, கடல்சார் கண்காணிப்பு முதலிய பாரம்பரிய துறைகளுக்கும், இந்த செயற்கைக்கோள் வணிக தொலை உணர்வு தரவுகளை வழங்குகிறது.

இந்த ஏவுதல், லாங் மார்ச் ஏவூர்தி தொடரின் 516வது முறை பயணம் ஆகும்.