பண்பாட்டு பாரம்பரியத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும்:ஷிச்சின்பிங்
2024-04-15 19:59:00

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பண்பாட்டு மரபு செல்வத்தைப் பாதுகாப்பது, சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டை முன்னெடுத்துச் செல்வது என்ற கட்டுரை ஏப்ரல் 16ஆம் நாள் வெளியான கியூ ஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.

இக்கட்டுரையில் ஷிச்சின்பிங் கூறுகையில், தொல் பொருட்களும் பண்பாட்டு மரபு செல்வங்களும், சீனத் தேசத்தின் மரபணுவிலும் இரத்தத்திலும் கலந்துள்ளன. இவை, புதுப்பிக்க முடியாத மற்றும் ஈடிணையற்ற சீனத் தலைசிறந்த நாகரிகமாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார். மேலாண்மையை வலுப்படுத்துதல், மதிப்பை வெளிப்படுத்துதல், பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தவிர, சீனத் தேசத்தின் நாகரிகம் எப்போதும் வேறுபட்ட பண்பாடுகளுக்கிடையேயான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மதிப்புக்கு ஆதரவு அளிக்கின்றது என்று அவர் தெரிவித்தார். மேலும், உலகின் பல்வேறு பண்பாடுகளுக்கிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.