ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா பங்கேற்காது:ஜோ பைடன்
2024-04-15 10:02:15

இஸ்ரேலுக்கு எதிராக பல ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஈரான் செலுத்திய பின், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் பெரிய அளவிலான பிராந்திய போரின் அபாயத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா பங்கேற்காது என்று அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்தனர் என்று ஏப்ரல் 14ஆம் நாள் தகவல் அறியும் அமெரிக்க அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது. இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேதன்யாகுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பைடன் கூறுகையில், ஈரானின் தாக்குதல்களை இஸ்ரேல் வெற்றிகரமாக இடைமறித்தது பெரிய வெற்றியாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார். இஸ்ரேல் மேலும் பதில் தாக்குதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் மறை முகமாக கூறினார்.