ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து பாதுகாப்பவை அவசர கூட்டம்
2024-04-15 10:46:09

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள், இஸ்ரேலின் கோரிக்கையின்படி, இஸ்ரேல் மீது ஈரானின் இராணுவத் நடவடிக்கை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது.

இக்கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரக் குழுவின் பொறுப்பாளர் டைப்பிங் கூறுகையில்,

சர்வதேச சமூகம் காசா பகுதியில் மனித நேய பேரழிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்பகுதியில் போர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. அதே வேளையில், இப்பகுதியில் மோதல் தொடர்ந்து நிகழ்ந்ததால் பிரதேசத்தின் பதட்ட நிலைமையைத் தீவிரமாக்கி, வெளியுலகத்திற்கு சிக்கலான மற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது பற்றியும் சர்வதேச சமூகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

சர்வதேசச் சமூகத்தில், குறிப்பாக, அதிகமான செல்வாக்கு வாய்ந்த நாடுகள், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்திற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.