உலகின் முதலிடத்தில் உள்ள சீனாவில் கட்டுப்பட்டு கொண்டிருக்கும் அணு மின்னாக்கி மற்றும் மின் உற்பத்தி திறன்
2024-04-15 11:38:51

சீனாவின் அணு ஆற்றல் தொழில் சங்கம் 15ஆம் நாள், 2024 சீனாவின் அணு ஆற்றல் வளர்ச்சி அறிக்கை எனும் நீல அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அணு மின் நிலையத்தின் இயக்கம், திட்டப்பணியின் கட்டுமானம், தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் முதலியவை குறித்து, சீனாவின் அணு ஆற்றல் தொழில் துறையின் நிலைமை தொகுத்து ஆய்வு செய்யப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இது வரை, சீனாவில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற அணு மின்னாக்கிகளின் எண்ணிக்கை 26 ஆகும். இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 3 கோடியே 3 இலட்சம் கிலோவாட் ஆகும். இது, தொடர்ந்து உலகின் முதலிடத்தில் பிடித்துள்ளது.

சீனாவின் அணு மின்னாற்றல் உற்பத்தி அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், மொத்த மின்சார உற்பத்தி 43 ஆயிரத்து 337 கோடி கிலோவாட் மணியை தாண்டி, உலகில் 2ஆவது இடத்தில் உள்ளது.