இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஜி.டி.பி. 5.3விழுக்காடு அதிகரிப்பு
2024-04-16 14:05:37

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 29லட்சத்து 62ஆயிரத்து 990கோடி யுவான் எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.3விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்ததை விட, 1.6விழுக்காடு அதிகமாகும்.

தொழிற்துறையைப் பொறுத்தவரை, முதன்மை தொழிலின் கூட்டு மதிப்பு ஒரு லட்சத்து 15ஆயிரத்து 380கோடி யுவானை எட்டி 3.3விழுக்காடு அதிகமாகும். இரண்டாம் நிலைத்தொழிலின் கூட்டு மதிப்பு 10 லட்சத்து 98ஆயிரத்து 460கோடி யுவான் எட்டி 6.0விழுக்காடு அதிகமாகும். மூன்றாவது நிலைத்தொழிலின் கூட்டு மதிப்பு 17லட்சத்து 49ஆயிரத்து 150கோடி யுவான் எட்டி 5.0விழுக்காடு அதிகமாகும்.

உற்பத்தித் தேவை நிலைப்புடன் அதிகரித்துள்ளது. உயர் தர வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் பெற்று சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி வருகிறது.