ஜெர்மனி பொருளாதாரப் பிரதிநிதிக் குழுவுடன் துணைத் தலைமையமைச்சர் சந்திப்பு
2024-04-16 20:07:31

சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் துணைத் தலைமையமைச்சருமான ஹெ லிஃபங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில், ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் சீனாவுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பொருளாதாரப் பிரதிநிதிக் குழு உறுப்பினர்களைச் சந்தித்தார். இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

ஹெ லிஃபங் கூறுகையில், சீனாவும் ஜெர்மனியும் முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டாளிகளாக திகழ்கின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு சீரான நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதுடன், வளர்ச்சிக்கான உள்ளாற்றல் பெரிய அளவில் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை விரிவாக்க வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெர்மனி பொருளாதாரப் பிரதிநிதிக் குழுத் தலைவர் கூறுகையில், சீனப் பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நலன்கள் தரும் கூட்டு வெற்றியை முன்னேற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.