இலங்கையில் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.5 சதவீதம் குறைந்துள்ளது
2024-04-23 17:40:09

கடந்த பிப்ரவரி திங்கள் 5.1 சதவீதமாக இருந்த இலங்கையின்   பணவீக்கம் மார்ச் திங்களில் 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக   அந்நாட்டு கணக்கெடுப்பு  மற்றும் புள்ளிவிபர துறை 23ம் நாள் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக உணவு பொருட்களின் பணவீக்கம் மாற்றமின்றி 5 சதவீதமாக காணப்பட்டது. அதேவேளை, உணவு அல்லாத பிறப் பொருட்களின் பணவீக்கம் பிப்ரவரியில் 5.1 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் பணவீக்கம் 69.8 சதவீதமாக இருந்த நிலையில் 2022ம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் முதல் படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய குறுகிய கால வரி சீர்திருத்தங்கள், பணவீக்க அதிகரிப்பைத் தொடர்ந்து, இலங்கையின் பணவீக்கம் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கு மட்டத்தில் நிலையானதாக இருக்கும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி முன்னதாக தெரிவித்தது.