சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் வளர்ச்சிப் போக்கு மாறாது
2024-04-24 17:20:32

இவ்வாண்டின் முதலாவது காலாண்டின் பொருளாதாரத் தரவுகளைச் சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட பிறகு, இவ்வாண்டின் சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டைப் பல சர்வதேச நாணய நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஏப்ரல் 24ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்தது. நுகர்வு, முதலீடு, ஏற்றுமதி ஆகிய 3 குறியீடுகள் சீராக உள்ளன. அதிகரிப்பு, வேலை வாய்ப்பு, பண வீக்கம், சர்வதேச வரவு செலவு ஆகிய 4 ஒட்டுமொத்த குறியீடுகள் நிதானமான நிலையில் உள்ளன. முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகமாகும் என்றார்.

எதிர்காலத்தில், சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் வளர்ச்சிப் போக்கு மாறாது. உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை திறப்புப் பணி முன்னேற்றப்பட்டு வருவதுடன், சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.