இந்தியாவின் சில பகுதிகளில் கடும் வெப்ப அலை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
2024-04-24 19:32:27

கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு இந்தியாவின் சில மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெப்ப அலை தொடரும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் காலநிலை மாற்றம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பாக சில கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேரடியாக வெப்பம் தாக்கக்கூடிய உடல் உழைப்பாளர்கள், மற்றும் அதிக வெப்பத்தின் போது மக்கள் கூட்ட நெரிசல் ஆகிய அபாயங்களைத் தவிர்க்க வலியுறுத்தியுள்ளது. மக்கள் வெப்பம் தொடர்பான நோய்கள் பாதிப்புகளை தடுக்க நிழற்பகுதி உள்ள இடங்கள் மற்றும் அதிக தண்ணீர் பருகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம், இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் வெப்ப தாக்குதல் மற்றும் வெப்பம் தொடர்பான நோயால் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.