சொங்சிங் மாநகர் சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்க வேண்டும்:ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
2024-04-24 19:38:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சொங்சிங் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சொங்சிங் மாநகர் தன் மேம்பாடுகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, புதிய வளர்ச்சி கட்டமைப்புக்கு முன்முயற்சியுடன் சேவை புரிந்து, இதில் ஒன்றிணைய வேண்டும் என்றும், உயர் தர வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றி, புதிய யுகத்தில் மேற்கு பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய நெடுநோக்கு மையமாகவும், பெருநிலப்பகுதியின் திறப்புக்கான ஒட்டுமொத்த மையமாகவும் தன்னை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 22 முதல் 24ஆம் நாள் வரை, ஷிச்சின்பிங் சொங்சிங் மாநகரில் உள்ள சரக்குப் போக்குவரத்து பூங்கா, நகரக் குடியிருப்பு பகுதி, எண்ணியல்மயமாக்க நகர செயல்பாடு மற்றும் மேலாண்மை மையம் முதலிய இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.