அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
2024-04-26 17:06:06


சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போது சர்வதேச சூழ்நிலை சிக்கலானது. சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது, இரு நாட்டு மக்களின் பொது விருப்பமாகவும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகவும் திகழ்கிறது. அமெரிக்கா ஆக்கப்பூர்வமான மனப்பாங்குடன் சீனாவின் வளர்ச்சியை அணுகி கையாள வேண்டும். இந்த அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான், சீன-அமெரிக்க உறவு சீராக முன்னேறலாம் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு, அரசுத் தலைவர் பைடனுடன் சான் பிரான்சிஸ்கோவில் சந்திப்பு நடத்தினேன். கடந்த சில மாதங்களில், இரு தரப்புகள் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்றுள்ளன. ஆனால், இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.