இலங்கையின் வர்த்தகம் முதல் காலாண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது
2024-05-07 18:53:05

2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் இறக்குமதி 12.9 விழுக்காடும், ஏற்றுமதி 5.7 விழுக்காடு, அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் விவசாய பொருட்கள் ஏற்றுமதி 5.1 விழுக்காடும் தொழில்துறை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி 6 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் காலாண்டில் உற்பத்தி, தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளின் விரிவாக்கத்தால் இலங்கையின் பொருளாதாரம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார சரிவைத் தொடர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் மிதமான 2.2 விழுக்காடு வளர்ச்சி பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.