புடா அரண்மனையைப் பார்வையிட்ட பெங் லீயுவான்
2024-05-09 21:10:11

மே 9ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார் அழைப்பை ஏற்று புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி அரசுத் தலைவர் சுல்யோக்கின் மனைவி நாஜியுடன் இணைந்து, புடா அரண்மனையைப் பார்வையிட்டார்.

பெங் லீயுவான் ஹங்கேரியின் பீங்கான் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பூத்தையல் கைவினைக் கலை ஆகியவற்றைக் கண்டு ரசித்தார். அவர் கூறுகையில், பீங்கான் மற்றும் பூத்தையல், சீனா மற்றும் ஹங்கேரி நாகரிகங்களின் பொதுவான சின்னமாகும். இரு நாட்டுக் கலைஞர்கள் பரிமாற்றத்தை அதிகரித்து, நாகரிகங்களின் ஒன்றிணைப்பை முன்னேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பின், பெங் லீயுவான் மற்றும் நாஜி ஆகியோர் நட்பார்ந்த சூழ்நிலையில் உரையாடினர். பெங் லீயுவான் கூறுகையில், ஹங்கேரி, ஓர் அழகான நாடாகும். ஹங்கேரி மக்களின் விருந்தோம்பல் சிறப்பாக உள்ளது. சீனா மற்றும் ஹங்கேரி ஆகிய இரு நாடுகளின் பண்பாடுகளுக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாட்டு நட்புறவுக்கு உறுதியான அடிப்படை உண்டு. இந்நட்புறவு தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.