பெய்ஜிங்கில் சீன–தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-05-14 18:55:01

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 13ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சாவோ தேய்-யுல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங் யீ கூறுகையில்,

சமீப காலத்தில் சீன-தென்கொரிய உறவில் சிக்கல்கள் மற்றும் அறைகூவல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, இரு தரப்புகளின் கூட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல. இத்தகைய நிலையைப் பார்க்க சீனாவும் விரும்பவில்லை. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பின்பற்றி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து, குறுக்கீட்டைத் தவிர்த்து, இரு நாட்டுறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல தென்கொரியா சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் தென்கொரியா, சீனாவுடன் இணைந்து பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, ஒருமித்த கருத்துக்களை விரிவுபடுத்தி, ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, இரு தரப்பு ஒத்துழைப்பின் புதிய நிலையை கூட்டாக தொடங்கி வைக்க விரும்புகிறது என்று சாவோ தேய்-யுல் தெரிவித்தார்.