காசா சூழ்நிலை பற்றிய ஐ.நாவின் அமைப்புகளின் வேண்டுகோள்
2024-05-18 17:56:32

மனித நேய விவகாரத்துக்கான ஐ.நாவின் ஒருங்கிணைப்பு அலுவலகமும், உலகச் சுகாதார அமைப்பும் உள்ளூர் நேரப்படி மே 17ஆம் நாள் ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தின. மனித நேய உதவிப் பொருட்கள் தங்கு தடையின்றி காசா பிரதேசத்துக்கு அனுப்பப்படுவதை உத்தரவாதம் செய்து, அங்குள்ள மனித நேய சூழ்நிலை மோசமாகி வருவதைத் தவிர்க்கும் வகையில், இப்பிரதேசத்துக்குச் செல்லும் தரை பாதை நுழைவாயிலைத் திறக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தன.

உலகச் சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மே 6ஆம் நாள் முதல், மருத்துவப் பொருட்கள் காசா பிரதேசத்துக்கு அனுப்ப முடியவில்லை. மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிப்பொருட்களின் பற்றாகுறையின் காரணமாக, காசா பிரதேசத்தின் மருத்துவ அமைப்புமுறை மற்றும் காசா மக்கள் மேலும் பெரும் அறைக்கூவல்களைச் சந்தித்துள்ளனர் என்றார்.