சீனப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டு அதிகரிப்பு குறித்து சீனா கருத்து
2024-05-18 19:56:52

ஐரோப்பிய ஆணையம் மற்றும் பல சர்வதேச நாணய நிறுவனங்கள் அண்மையில் சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான மதிப்பீட்டை உயர்த்துவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் சீரான போக்கினால், சர்வதேச சமூகம் சீனா மீது பேரார்வம் காட்டும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து, சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாக மீட்சியடைந்து வருகிறது. இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதாரம் 5.3 விழுக்காடு அதிகரித்தது. ஏப்ரல் திங்கள், உற்பத்தி துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண், 50.4 விழுக்காடாகும். சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி இறக்குமதி தொகை கடந்த ஆண்டின் ஏப்ரல் திங்களில் இருந்ததை விட 8 விழுக்காடு அதிகரித்து, 3 லட்சத்து 64 ஆயிரம் கோடி யுவானை எட்டி, வரலாற்றின் அதே காலத்தில் மிக அதிகம் என்று வாங் வென்பின் தெரிவித்தார்.

பொருளாதாரம் சீராக வளர்ந்து, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி வரும் சீனா, உலகப் பொருளாதார அதிகரிப்பின் இயக்கு ஆற்றலாகவும், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் இலக்கிடமாகவும் தொடர்ந்து விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.