குரோஷியத் தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து செய்தி
2024-05-29 10:39:22

குரோஷியத் தலைமையமைச்சராக மீண்டும் பதவியேற்ற ஆண்ட்ரே பிளென்கோவிச்க்குச் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 24ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீன-குரோஷிய பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உள்ளடக்கம் நாளுக்குநாள் செழிப்பாகி வருகின்றது. பெலீஷேக் பாலத்தைச் சின்னமாக கொண்ட இரு நாடுகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பு பலனளிக்கிறது. இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது. குரோஷியாவுடன் இணைந்து சீனாவின் நவீனமயமாக்கம் கொண்டு வரும் புதிய வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளச் சீனா விரும்புகின்றது. இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், பாரம்பரிய நட்பையும் அரசியல் துறையில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையையும் வலுப்படுத்தி, கூட்டு கலந்தாய்வு மற்றும் கட்டுமானத்தை உருவாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை மேம்படுத்தி, இரு நாட்டு உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்லுவதை முன்னேற்ற வேண்டும் என்றார்.