சீன மற்றும் எகிப்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2024-05-29 19:05:39

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவுக்காகவும், அரசுமுறைப் பயணத்துக்காகவும் சீனாவுக்கு வருகை தந்துள்ள எகிப்து அரசுத்தலைவர் அப்தெல் ஃபத்தஹ் அல் சிசியை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 29ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷுச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீனாவுக்கும் எகிப்துக்கும் இடையே விரிவான நெடுநோக்கு கூட்டுறவு நிறுவப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த பத்து ஆண்டுகளில், சீன-எகிப்து உறவு, சீனாவுக்கும், அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒன்றுக்கொன்று வெற்றி பெறுதல் ஆகிய துறைகளின் மாதிரியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சமத்துவம் மற்றும் ஒழுங்கமைவுடன் பல்துருவ உலகத்தையும் உள்ளடங்கிய தன்மை வாய்ந்த உலகமயமாக்க பொருளாதாரத்தையும் கொண்டு வர வேண்டும் என்று சீனா முன்மொழிந்து வருகின்றது. எகிப்துடன் இணைந்து, பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, ஒத்துழைப்பை முன்னேற்றுவதோடு, சர்வதேச நியாயம் மற்றும் நீதியையும் வளரும் நாடுகளின் கூட்டு நலன்களையும் பேணிகாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.