• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 12:02:41    
உய்கூர் இன மாணவர்கள்

cri

இப்பள்ளி மாணவரில் பலர் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். இது குறித்து, மாணவர்களுக்கு அறிவியல் மூலம் வேளாண் துறையில் ஈடுபடுவது, நீர் வாழ்வன வளர்ப்புத் துறைகள் பற்றிய அறிவைக் கற்றுத் தரும் வகையில், இப்பள்ளி வேளாண் துறை நிபுணர் பலரை விரிவுரையாற்ற வரவழைத்துள்ளது. இப்பள்ளியில் படித்து முடித்த பின், தாம் கற்றதை நடைமுறையில் மாணவர் பயன்படுத்தலாம். இதனால், உள்ளூர் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது. மேற்கு சிங்சியாங்கின் ஒரு தன்னாட்சி சோவைச் சேர்ந்த அதூஷ் நகரின் மசூதி ஒன்றிலிருந்து வந்த எசாக்காழ் எனும் இமாம், உள்ளூர் மசூதியில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகின்றார்.

முன்பு நாங்கள் வயல்களில் தரையில் கம்பளத்தையும் பாய்களையும் விரித்து, தொழுகை புரிந்தோம். இப்போது கவின்மிகு மசூதிகள் பல இடங்களில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. உருமுச்சி மறையியல் பள்ளிகளில் இலவச பயிற்சி பெற தன்னாட்சிப் பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. அன்றி, உண்பதற்கும் உறங்குவதற்கும் நல்ல வசதி செய்து தரப்பட்டுள்ளது. எங்களுக்குப் பாடம் கற்றுத்தர அனுபவமிக்க பேராசிரியர்களையும் அமர்த்தியுள்ளது. எங்கள் மத நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கப்படுவதை இது காட்டுகின்றது என்று அவர் கூறினார்.

1  2  3  4