எய்ட்ஸ் சிகிச்சை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு, ஜுலையில் பாரிசில் நடைபெற்றது.
சீனாவில், எய்ட்சுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தக் கருத்தரங்கு சீன ஆராய்ச்சியாளர்க்கு எழுச்சி தந்துள்ளது.
மக்கள் தொகை மிகுந்த சீனாவிலும் இந்தியாவிலும் எய்ட்ஸின் பரவலைத் தடுப்பது என்பது, உலகம் தழுவிய போராட்டத்தில் மிக முக்கியமானதாகும் என்பதை இந்தக் கருத்தரங்கு உணர்த்தியுள்ளது.
எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு, அதற்கான பயன் மிக்க மருந்து—இந்த இரண்டிலும் சீன ஆராய்ச்சியாளர் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர்.
எய்ட்சுக்குச் சிகிச்சையளிப்பது தொடர்பான சமூக வழிமுறைகள், இந்த பாரிஸ் கருத்தரங்கில் ஆராயப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகும், எய்ட்ஸ் நோயாளிகள் முழுமையாக குணமடையாத போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடலாம் என்று சீன ஆராய்ச்சியாளர் Dai Zhicheng கூறுகிறார்.
சிகிச்சை பெறும் போது, குடும்பத்தினரும் பிறரும் நோய்த் தொற்றுக்கு ஆளாமல் இருப்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள இயலும்.
சமூகத்தின் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு, குணமடைந்த எய்ட்ஸ் நோயாளிகள், ஏதேனும் பணியில் சேரலாம்.
சிகிச்சை மட்டுமே போதுமானதல்ல. உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு, பொருளாதார நிவாரணம் ஆகியவற்றுடன் அது இணைக்கப்பட வேண்டும் என்று Dai கூறுகிறார்.
HIV அதிக அளவில் காணப்படும் 50 முதல் 100 கவுண்டிகளில், எய்ட்ஸ் சிகிச்சை திட்டத்தைச் சீன அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்குவதற்கென, இலட்சக்கணக்கான யுவான் தொகையை ஒதுக்கியுள்ளது.
1 2 3 4
|