தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரத்த தானம் செய்த போது, HIV தொற்றுக்கு ஆளானவர்களுக்கே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹோநான் அன்ஹுய் ஆகிய 2 மாநிலங்களில் இத்தகைய எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். ரத்த தானம் செய்த ஏழைகள், மோசமான சுகாதாரமற்ற ஊசி காரணமாக, எய்ட்ஸ் வைரசுக்கு ஆளாயினர்.
அடுத்த கட்டமாக, மற்ற வகை எய்ட்ஸ் நோயாளிகள் மீது சீன ஆராய்ச்சியாளரின் கவனம் திரும்பியுள்ளது.
பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளானோர் சீனாவில் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
எண்பதுகளில், இந்த எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது.
போதைப் பொருள் பயன்படுத்துவோர், முதல் வகையில் இடம்பெறுகின்றனர். தென்மேற்கு சீனாவில் இவர்கள் அதிகமாக உள்ளனர்.
ஐந்து ஆண்டுகளில், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்திலிருந்து, நாடு முழுவதும் எய்ட்ஸ் பரவி விட்டது.
போதை மருந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளில், போதை மருந்து பயன்படுத்துவோர், மொத்த எண்ணிக்கையில் 53.3 விழுக்காடு ஆகும். இவர்களில் 40 விழுக்காட்டினர், ஊசிகளைப் பகிர்ந்து கொண்டு பயன்படுத்துகின்றனர்.
1 2 3 4
|