கிராமத்திலிருந்து நகரங்களுக்கு வருவோர், அடிப்படை நலவாழ்வு வசதி பெற வாய்ப்பில்லை.
தவிர, நலவாழ்வுக் கல்வி, அவர்களுக்கு எட்டுவது இல்லை.
எனவே, பொது நலவாழ்வுத் திட்டங்களில், இத்தகையோரை இடம் பெறச் செய்வதற்கு வழிவகை மேற்கொள்ள வேண்டும் என, சீன ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
சுற்றுலாத் துறையிலும் வியாபாரத்திலும் ஈடுபடும் இத்தகைய இடம் பெயர்ந்த மக்கள், மிகவும் கவனிக்கப்படத்தக்கவர்களாகின்றனர்.
சீனாவில் எய்ட்ஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்று, ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
தற்போது, மருந்து—வாக்சின் எல்லாமே, எதிர்பார்த்த அளவுக்குப் பலனளிக்கவில்லை. ஆணுறைப் பயன்பாடு, தூய்மையான ஊசிகளின் பயன்பாடு—இவ்விரண்டையும் பரவலாக்க வேண்டும் என்று யோசனை கூறப்படுகிறது.
ஆனால், இதில் பிரச்சினை நிலவுகிறது. போதை மருந்து பயன்படுத்துவோர்—சுத்தமான ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும். பாலியல் உறவின் போது ஆணுறை அவசியம்—என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது, சட்டப்படியாகவும் பாரம்பரியச் சிந்தனையின்படியும் சிக்கலான பிரச்சினைகளாகும். இதை விளம்பரப்படுத்துவதனால், விபச்சாரமும் கள்ளத்தனமான போதைப் பொருள் பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்புண்டு என எதிர்ப்புக் குரல் எழுப்போரும் உள்ளனர்.
வியாபார ரீதியிலான இது தொடர்பான விளம்பரத்தை, தற்போதைய சட்டம் தடுக்கிறது.
ஐந்தாண்டு செயல் திட்டம் ஒன்றினை, சீன அரசு துவக்கியுள்ளது. சீனாவில் எய்ட்ஸ் பரவுவதைப் பெருமளவில் தடுப்பதற்கு இது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும்.
புதிய கொள்கைத்திட்டங்கள், எதிர்பார்த்த அளவு, வேகமாக நடைமுறைப்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
ஏனைய வளரும் நாடுகளில், எய்ட்ஸ் வைரசு பரவலைத் தடுப்பதில் பயன் விளைவித்துள்ள அனுபவங்களைக் கற்றுக் கொள்வது மிக முக்கியம் எனச் சீனாவில் கருதப்படுகின்றது.
சார்ஸ் கட்டுப்பாட்டுப் பணியில் பெற்ற வெற்றியின் விளைவாக, எய்ட்ஸ் நோயையும் சீனாவில் கட்டுப்படுத்த இயலும் என்பதற்கான, நம்பிக்கை மிகுந்த அறிகுறிகள் தென்படுகின்றன. 1 2 3 4
|