அடுத்த வகையினர்—பாலியல் தொழிலாளர். எய்ட்ஸ் வைரசு பரவுவதற்கு, பாலியல் உறவு மிகச் சிறந்த ஊடுவழியாகி வருவதாக, ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
சீனாவில், 1985க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில், பாலியல் நோய்க்கு ஆளானோர் எண்ணிக்கை 100 மடங்காகியிருக்கிறது.
மற்றவர்களைக் காட்டிலும், எய்ட்ஸ் வைரஸ் தொற்றி கொள்ளும் வாய்ப்பு, இவர்களுக்கு மிக அதிகமாக—அதாவது 3 முதல் 5 மடங்கு அதிகமாக—காணப்படுகிறது.
சீனாவில் எய்ட்ஸ் நோய், HIV வைரசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், பாலியல் நோய் பரவாமல் தடுப்பது மிக மிக இன்றியமையாததாகிறது.
ஆணுறை அணிவது என்றே, இதையும் எய்ட்சையும் தடுக்கச் சிறந்த வழி எனக் கூறப்படுகிறது.
திருமணத்துக்குப் பணம் சேர்ப்பது, குடும்பத்தைக் காப்பாற்றுவது, வேறு வேலை ஏதும் கிடைக்காதது—இந்த மூன்று காரணத்தினால், 20 வயதுப் பெண்கள் பலர், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக, ஒரு கள ஆய்வு தெரிவிக்கின்றது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர், மூன்றாவது பிரிவில் அடங்குவர். சீனாவில் இவர்களைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியாது என்ற போதிலும், இவர்களில் 1 முதல் 3 விழுக்காட்டினர் வரை எய்ட்சுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
தவிர, சீனப் பொருளாதாரத்தின் விரைவான அதிகரிப்பின் விளைவாக, அதிக எண்ணிக்கையில் இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்று தொழிலில் ஈடுபடுவோர், கவனத்துக்குரிய மற்றொரு வகையினராவர்.
1 2 3 4
|