வடகிழக்குச் சீனாவின் லியாவ்நிங் மாநிலத்தின் தலைநகரான சன்யாங், சீனாவின் பழைய தொழிற்துறை தளமாகும். வேலை வாய்ப்பு இழந்த முன்னாள் அரசு தொழில் நிறுவனத்தின் தொழிலாளர் மீண்டும் வேலை பெற, மாநகர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், முனைப்புடன் உதவியுள்ளது. பணித்தலங்களை அதிகப்படுத்துவது, சுயமாகத் தொழில் நடத்துவதற்கு ஊக்கமளிப்பது, பயிற்சியை வலுப்படுத்துவது, முன்னுரிமை வழங்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துவது முதலிய வழிமுறைகள் மூலம், மிகப் பெரும்பாலான வேலையற்றோர் மீண்டும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
பெரிய நடுத்தர பழைய தொழிற்துறை நிறுவனங்களைக் கொண்டது சன்யாங். முன்பு, அதிக அரசு தொழில் நிறுவனங்களைக் கொண்டிருப்பது, நடுவண் அரசு நிதிக்குப் பெரும் பங்காற்றுவது ஆகியவற்றால் அது புகழ் பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கடும் சமூகச் சுமை ஆகியவற்றுக்கு அது பெயர் பெற்றுள்ளது. ஏனெனில், தொண்ணூறுகளின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில், தொழிலாளர் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டது, அரசு தொழில் நிறுவனங்களின் சுமையைக் குறைத்து, தொழில் நுட்பத்தைப் புதுமையாக்குவது மற்றும் புதிய உற்பத்திப் பொருட்களை வளர்ச்சியுறச் செய்வதில் அவற்றுக்குத் துணை புரியும் வகையில், சன்யாங் மாநகராட்சி மறு சீரமைப்பு மேற்கொண்டதே காரணமாகும். வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 4 லட்சத்து 10 ஆயிரத்தை எட்டியது. அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கும் பணிக்கு, சன்யாங் மாநகராட்சி, உழைப்பு மற்றும் சமூகக் காப்பீட்டுத் துறை ஆகியவற்றின் பணியாளர் பொறுப்பேற்கின்றனர்.
1 2 3 4
|