• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 15:36:00    
சன்யாங் மாநகரில் மறு வேலை வாய்ப்பு

cri

கொள்கைரீதியில் உதவியளிப்பது, வேலையை ஏற்பாடு செய்வது, வேலை பெறுவதற்குச் சேவை புரிவது, கடன் வழங்குவது, முதலீடு செய்வது ஆகியவற்றின் மூலம், சன்யாங் மாநகரில், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மறு வேலை வாய்ப்பு வழங்கும் பணியை வலுப்படுத்தியுள்ளோம். இவ்வாறு, நாட்டின் கொள்கைக்கிணங்க, அவர்கள் வேலை பெறுவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். தற்போது, எங்கள் பணி நல்ல பயன் தந்துள்ளது என்று சன்யாங் மாநகர உழைப்பு மற்றும் சமூகக் காப்பீட்டுத் துறையின் துணைத் தலைவர் சுங் நை யி கூறினார்.

சன்யாங் மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக, வேலையற்ற தொழிலாளர்களுக்கு மறு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு ஊக்கமளிக்கும் கொள்கையை பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இம்மாநகரில், வேலையற்ற தொழிலாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு, முன்னுரிமையுடன் கூடிய கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வகை முன்னுரிமையுடன் கூடிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களை வளப்படுத்துவதற்கான நாட்டின் கொள்கையின் உதவியுடன் எங்கள் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. நாட்டுக்காக கவலையைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாண்டு, அரசு தொழில் நிறுவனங்களின் 53 வேலையற்ற தொழிலாளர்களை எங்கள் தொழில் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அரசு எங்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. அவர்கள் செவ்வனே பணியாற்றுகின்றனர். தொழில் நிறுவனத்துக்குப் புதிய உயிராற்றலை அவர்கள் வழங்கியுள்ளனர் என்று, ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் பொது மேலாளர் தெங் யான் பிங் கூறினார்.

1  2  3  4